கவிநிலா

Friday, December 21, 2007

எப்படியெப்படி ரசிப்பாய் நீ?

திருவிழா உடை
தேர்க்கடை பொட்டு
புதுத் தலைப்பின்னல்
அளவான மை
காதோரம் சுருளும் முடி
சாயமில்லா உதடு
கலகலக்கும் வளையல்கள்
சத்தமிடும் கொலுசு
கண்ணாடி முன்
இவை யாவையும்
நான் ரசிப்பது இல்லை
எண்ணி மாய்வதெல்லாம்
நீ எப்படியெப்படி ரசிப்பாய்
என்று மட்டும்தான்!!!

Labels:

எழுதியது : கவிநிலா at 10:56 PM 0 நண்பர்கள் கூறியவை

Tuesday, June 19, 2007

புரியாமல் தவிக்கிறேன்

"நானும்........."

"எனக்கும் அப்படிதான்........."

"இங்கேயும் அதே நிலைதான்........."

தினமும் கண்ணாடி முன்

பயிற்சி எடுக்கிறேன்தான்......

எதிலும் மனம்

திருப்தியடையவில்லை

உன் காதலை சொல்லும்போது

எவ்வாறுதான் பதில் சொல்வது???

Labels:

எழுதியது : கவிநிலா at 7:59 AM 4 நண்பர்கள் கூறியவை

Thursday, June 14, 2007

அன்பே!

உன்னைப் பார்த்து
சிரிக்கும் போது
செல்லமாய்
முறைத்துப் போகிறாய்.....

ஓரவிழிப் பார்வை
தெரிந்திரிந்தும்
புரியாதவன் போல்
நடிக்கிறாய்.........

பார்வை அம்புகள்
உனை மட்டுமே
சுற்றி வருவதை
கவனியாமலேயே நீ......

அன்பே! உன்
கடைக்கண் பார்வைக்கு
ஏங்கித் தவிக்கவா
இப்பிறவியெடுத்துவந்தேன்???

Labels:

எழுதியது : கவிநிலா at 7:18 AM 8 நண்பர்கள் கூறியவை

நினைவுகள்

எவ்வளவுதான்
சுத்தமாய் துடைத்தெடுத்து
இறுக கட்டி
வெகு ஆழத்தில்
புதைத்து வைத்தாலும்
குறும்பாய் எட்டிப் பார்த்து
அழகாய் சிரிக்கிறது
உன் நினைவுகள்
எழுதியது : கவிநிலா at 7:17 AM 6 நண்பர்கள் கூறியவை

ஒற்றை சூரியனாய் நீ

சூரிய கதிர்களாய்
சிதறி கிடக்கும்
உன் நினைவுகளை
அள்ளியெடுத்து
சேர்த்துப் பார்க்கிறேன்......

அய்யோ!!!
பல கோடியாய்
இருந்த நீ
ஒற்றை நிலவாய்......

தொட்டி நிலவை
கலைத்து சிரிக்கும்
பிள்ளையென
கலைத்து குதூகலிக்கிறேன்......

என் அறியாமையில்
புன்னகைத்து சிரிக்கும்
ஒற்றை சூரியனாய் நீ......

Labels:

எழுதியது : கவிநிலா at 6:37 AM 3 நண்பர்கள் கூறியவை