கவிநிலா

Thursday, June 14, 2007

ஒற்றை சூரியனாய் நீ

சூரிய கதிர்களாய்
சிதறி கிடக்கும்
உன் நினைவுகளை
அள்ளியெடுத்து
சேர்த்துப் பார்க்கிறேன்......

அய்யோ!!!
பல கோடியாய்
இருந்த நீ
ஒற்றை நிலவாய்......

தொட்டி நிலவை
கலைத்து சிரிக்கும்
பிள்ளையென
கலைத்து குதூகலிக்கிறேன்......

என் அறியாமையில்
புன்னகைத்து சிரிக்கும்
ஒற்றை சூரியனாய் நீ......

Labels:

எழுதியது : கவிநிலா at 6:37 AM

3 Comments:

அருமையான கவிதைகள்... தமிழ் பதிவுலகத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன் :))

June 19, 2007 at 2:33 AM  

// ஜி 덧글 내용...
அருமையான கவிதைகள்... தமிழ் பதிவுலகத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன் :))
//

மிக்க நன்றி ஜி :-)

July 5, 2007 at 7:07 AM  

கவிநிலா,

கவிதைத்துவமாய் இருக்கிறது பெயர்... இயற்பெயரா? புனைப்பெயரா?

நானும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் வலைப்பூ பயணத்திற்கும், கவிப் படைப்புக்களுக்கும்.

கவிதை நன்றாக இருக்கிறது.. சில ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க முயலுங்களேன்.

'ஒற்றைச் சூரியனாய் நீ' ('ச்' வரவேண்டும்)

'சூரியக் கதிர்களாய்'
'கலைத்துச் சிரிக்கும்'
'கலைத்துக் குதூகலிக்கிறேன்'


தொடர்ந்து எழுதுங்கள்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

August 22, 2007 at 11:52 PM  

Post a Comment

<< Home