கவிநிலா
Thursday, June 14, 2007
அன்பே!
உன்னைப் பார்த்து
சிரிக்கும் போது
செல்லமாய்
முறைத்துப் போகிறாய்.....
ஓரவிழிப் பார்வை
தெரிந்திரிந்தும்
புரியாதவன் போல்
நடிக்கிறாய்.........
பார்வை அம்புகள்
உனை மட்டுமே
சுற்றி வருவதை
கவனியாமலேயே நீ......
அன்பே! உன்
கடைக்கண் பார்வைக்கு
ஏங்கித் தவிக்கவா
இப்பிறவியெடுத்துவந்தேன்???
சிரிக்கும் போது
செல்லமாய்
முறைத்துப் போகிறாய்.....
ஓரவிழிப் பார்வை
தெரிந்திரிந்தும்
புரியாதவன் போல்
நடிக்கிறாய்.........
பார்வை அம்புகள்
உனை மட்டுமே
சுற்றி வருவதை
கவனியாமலேயே நீ......
அன்பே! உன்
கடைக்கண் பார்வைக்கு
ஏங்கித் தவிக்கவா
இப்பிறவியெடுத்துவந்தேன்???
Labels: காதல்
8 Comments:
ஆஹா.. ஜி சொல்லி இந்த பக்கம் வந்தேன்.. உங்க கவிதைகள் எல்லாமே சூப்பர்.
ப்ரொபைல் கவிதை உட்பட...
நிறைய எழுத வாழ்த்துக்கள் :-)
முதன்முறையாய் வருகிறேன்... அருமையான கவிதைகள்... வாழ்த்துக்கள்...
மனசு...
அருமையான பதிவு. உங்களை எட்டு போட அழைத்து இருக்கிறேன்!
சிறப்பாக செய்யுங்கள்.
// G3 덧글 내용...
ஆஹா.. ஜி சொல்லி இந்த பக்கம் வந்தேன்.. உங்க கவிதைகள் எல்லாமே சூப்பர்.
ப்ரொபைல் கவிதை உட்பட...
நிறைய எழுத வாழ்த்துக்கள் :-)
//
நன்றி G3 :-)
அடிக்கடி வாங்க
// மனசு... 덧글 내용...
முதன்முறையாய் வருகிறேன்... அருமையான கவிதைகள்... வாழ்த்துக்கள்...
மனசு...
//
மிக்க நன்றி மனசு :-)
// சதுர்வேதி 덧글 내용...
அருமையான பதிவு. உங்களை எட்டு போட அழைத்து இருக்கிறேன்!
சிறப்பாக செய்யுங்கள்.
//
மிக்க நன்றி சதுர்வேதி. எனக்கு வேற எதுவும் எழுத வராது. இப்போதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். முயற்சி பண்ணி பார்த்தேன். வரவில்லை :(
மன்னியுங்கள்
அடடா..
'கடைக்கண் பார்வைதனை கன்னியர்தாம் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்'
('விரும்புகிறேன்' படத்தில் 'ஒத்தப்பார்வை பார்த்தா' என்ற பாடலின் பல்லவியின் தொடக்க வரிகளாய் வைரமுத்து எழுதியவை)
உங்களுக்கு இப்பொழுது 'பிறவியின் பயன்' புரிந்தது என்று நினைக்கிறேன். சரியா கவிநிலா?
காதலுக்காக ஏங்கும் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.
அன்புடன் ஜோதிபாரதி
http://jothibharathi.blogspot.com/
Post a Comment
<< Home